Friday, October 12, 2007

உளியின் துளிகள்




என் கனவில் வந்ததொரு பெண்ணின் சிற்பம்
உளியின் துளிகள் இதோ... சுந்தரராஜன்

எப்போதும் தேர்வு முடிவு வரை
எனக்கு நம்பிக்கை இராது
ஆனால் உன்னை முதல்
முறை பார்த்த போதே,
பேரன் பேத்தி வரை
கற்பனை செய்து விட்டேன்
என்ன காதல் இது

உன்னை என்னும் போதெல்லாம்

தமிழ் எழுத்துக்கள் கவிதை
வாக்களிக்க காத்திருக்கின்றன
பாவம் அவைகளுக்கு தெரியாது
நான் இன்னும்
விண்ணப்பிக்கவே இல்லையென


கடற்கரையில் நடக்காதே

உன் நீள கூந்தல் கண்டு
கார்மேகமென அஞ்சி
மழை முன்னறிவிப்பு செய்கின்றனர்
அவர்களுக்கு தெரியாது நீ
என்னில் மையம் கொண்ட புயலென


உன் ஆண் நண்பர்கள் எல்லாம்

எனக்கு எதிரிகளாகவெ தெரிகின்றனர்
அவர்களை நீ அண்ணன் என அறிமுகப்படுத்தும்
வரையில் இல்லை நீயும் உன்
காதலை வெளிப்படுத்தும் வரையில்

என்னவெல்லாமோ பேச நினைத்து

உன்னை அழைப்பேன் ஏதேதோ பேசிவிட்டு,
அப்புறம் என நானே கேட்பேன்
காதல் ஒரு நோய் தான்


நான் எவ்வளவோ முயற்சி செய்தும்

உன் சிணுங்களை காப்பீடு
செய்ய முடியவில்லை
மதிப்பிட முடியா பொருட்களுக்கு
காப்பீடு இல்லையாம்


உன்னுடன் பேசும் போது வேண்டும்

என்றே தோற்று போவேன்
வென்ற களிப்பிலாவது
அதிகம் பேச மாட்டாயா என


நீ வீட்டை விட்டு வெளியே வந்தால்

சூரியனே சற்று குழம்பித்தான் போகிறது.
என் வேலை நேரத்தில்நிலவிற்க்கு என்ன வேலை,
அதுவும் பூமியில் என்று


நீயுட்டனுடைய விதி தவறுதான்

என்னவளின் பார்வைக்கு சமமான
எதிர் வினையை காட்ட முடியுமா


இமை மூடும் நேரத்தில் இதயம் நுழைகிறதே

காதல் என்ன காற்றினும் மெலிதா
அவளுக்கும் என் நினைவு உண்டா
பெண் மனம் அறிவது அவ்வளவு எளிதா

கவி சக்கரவர்த்தி கம்பனால் கூட

கற்பனை செய்ய முடியாத கவிதை நீ
குறள் வடித்த வள்ளுவனால் கூட
வருணிக்க முடியா வார்த்தை நீ
நொடிகள் உன் நினைவால் நகர்வதால்
பெண்ணே என் வாழ்க்கை நீ

சுந்தரராஜன்

1 comment:

ஸ்ரீனிவாசன் said...

Sundar, Kadhal kavithaigal pramadham...konjam vaazhkai pathiyum eludunga...

(Yov, naan sonna karuthukku oru kavithai eludi thareanu solli 3 maasam aachu...engayya antha kavithai ?)