Monday, October 15, 2007

கொலு


உன் வீட்டில் எதற்கடி

கொலு அலங்காரம்

உயிருள்ள உயிர் வாங்கும்

பதுமையாக நீ இருக்கையிலே

உயிரற்ற பதுமைகள்

யாரை கவரப்போகின்றன

காலை வணக்கம்


பள்ளியில் ஆசிரியருக்கு கூட

நான் இவ்வளவு காலை

வணக்கம் சொன்னதில்லை

உனக்கு காலை

வணக்கம் சொல்லாமல்

என் கணிணி

வேலை செய்வதே இல்லை

கனவு தேவதை


யாரையாவது காதலிக்கிறாயா என

என்னிடமே கேட்கிறாயே

உன்னை தான் என சொல்லி

நம் உறவை முறித்து கொள்ள

நான் விரும்பவில்லையடி

நீ காதல் தேவதையாக வேண்டாம்

கனவு தேவதையாகவே
இருந்து விட்டு போ !!!

Sunday, October 14, 2007

வரதட்சணை


உன்னை உரித்தாக்கி கொள்ள

பணம் நகை எதுவும் வேண்டாமடி

அதுதான் 916 புன்னகையுடன்

அழகின் ரிசர்வ் வங்கியாக
நீ இருக்கிறாயே

Saturday, October 13, 2007

நிஜமான நிழல்


நிழலாய் இருந்த உன்னை
நிஜமாய் பார்த்த முதல் நாள்
அலாரம் வைத்து விட்டு
உடலளவில் உறங்கி விட்டேன்
மூன்று முறை விழித்து பார்த்து
கடைசியில் அலாரத்தை
நான் எழுப்பினேன்
எனக்கு உன்னை பிடிக்கும் என
உனக்கு தெரியாது
உனக்கு என்ன பிடிக்கும் என
எனக்கு தெரியாது
மனதில் பட்டிமன்றம் நடத்தி
உடை தேர்வு செய்தேன்

நிழற்ப் படம் பார்த்தே உன்
நிஜத்தை கற்பனை செய்தவன்
நிஜமாய் உன்னை பார்க்கும் போது
உன் நிழலை கூட
முழுதாய் பார்க்கவில்லை

ஒற்றை வார்த்தை


எந்த தேர்விற்கும் நான் இவ்வளவு
தயார் செய்ததில்லை
உன்னுடன் பேசும் முன்பு
என்ன பேச வேண்டும் என
பட்டியல் இடுகின்றேன்
பாவி மனது நீ ஹலோ சொன்னவுடன்
எல்லாவற்றையும் மறந்து விடுகிறது
எங்கேயடி கற்றுக்கொண்டாய்
ஒற்றை வார்த்தையில்
ஒருவனை சாய்ப்பதை

ஆசை



எப்போது அலை பேசி அடித்தாலும்
கை எடுத்து கண் பார்க்கும் முன்னே
மனம் குதித்து கேட்கிறது
அழைப்பது அவளா என
பார்க்கும் முன்னரே தெரிய வேண்டுமென
அவளுக்கு மட்டும் அழைப்பு மணியை
மாற்றி பார்த்தேன், எந்த ஓசை கேட்டாலும்
அந்த ஓசையா என
மனம் ஆசை படுகிறது

எதிர்காலம்

நான் விருப்பப்பட்ட உடன்
என் மன மேடைக்கு வந்தவளே
நீ விருப்பப்பட்டு
என் மண மேடைக்கு வரும் காலம்
எனக்கு நல்லதொரு வருங்காலம்

பயம்


உன் தெருவை கடக்கும் போதெல்லாம்
உன்னை பார்த்து விட மாட்டேனா
என்ற ஏக்கம் இருக்கும், அதனினும் அதிகமாக
உன்னை பார்த்து விட கூடாது
என்ற பயம்தான் அதிகம் இருக்கிறது.
பார்த்து விட்டு தெரியாதவன் போல்
நீ இருந்துவிட்டால் நான் எனக்கே
தெரியாதவன் ஆகி விடுவேனோ
என்கிற பயம்

Friday, October 12, 2007

உளியின் துளிகள்




என் கனவில் வந்ததொரு பெண்ணின் சிற்பம்
உளியின் துளிகள் இதோ... சுந்தரராஜன்

எப்போதும் தேர்வு முடிவு வரை
எனக்கு நம்பிக்கை இராது
ஆனால் உன்னை முதல்
முறை பார்த்த போதே,
பேரன் பேத்தி வரை
கற்பனை செய்து விட்டேன்
என்ன காதல் இது

உன்னை என்னும் போதெல்லாம்

தமிழ் எழுத்துக்கள் கவிதை
வாக்களிக்க காத்திருக்கின்றன
பாவம் அவைகளுக்கு தெரியாது
நான் இன்னும்
விண்ணப்பிக்கவே இல்லையென


கடற்கரையில் நடக்காதே

உன் நீள கூந்தல் கண்டு
கார்மேகமென அஞ்சி
மழை முன்னறிவிப்பு செய்கின்றனர்
அவர்களுக்கு தெரியாது நீ
என்னில் மையம் கொண்ட புயலென


உன் ஆண் நண்பர்கள் எல்லாம்

எனக்கு எதிரிகளாகவெ தெரிகின்றனர்
அவர்களை நீ அண்ணன் என அறிமுகப்படுத்தும்
வரையில் இல்லை நீயும் உன்
காதலை வெளிப்படுத்தும் வரையில்

என்னவெல்லாமோ பேச நினைத்து

உன்னை அழைப்பேன் ஏதேதோ பேசிவிட்டு,
அப்புறம் என நானே கேட்பேன்
காதல் ஒரு நோய் தான்


நான் எவ்வளவோ முயற்சி செய்தும்

உன் சிணுங்களை காப்பீடு
செய்ய முடியவில்லை
மதிப்பிட முடியா பொருட்களுக்கு
காப்பீடு இல்லையாம்


உன்னுடன் பேசும் போது வேண்டும்

என்றே தோற்று போவேன்
வென்ற களிப்பிலாவது
அதிகம் பேச மாட்டாயா என


நீ வீட்டை விட்டு வெளியே வந்தால்

சூரியனே சற்று குழம்பித்தான் போகிறது.
என் வேலை நேரத்தில்நிலவிற்க்கு என்ன வேலை,
அதுவும் பூமியில் என்று


நீயுட்டனுடைய விதி தவறுதான்

என்னவளின் பார்வைக்கு சமமான
எதிர் வினையை காட்ட முடியுமா


இமை மூடும் நேரத்தில் இதயம் நுழைகிறதே

காதல் என்ன காற்றினும் மெலிதா
அவளுக்கும் என் நினைவு உண்டா
பெண் மனம் அறிவது அவ்வளவு எளிதா

கவி சக்கரவர்த்தி கம்பனால் கூட

கற்பனை செய்ய முடியாத கவிதை நீ
குறள் வடித்த வள்ளுவனால் கூட
வருணிக்க முடியா வார்த்தை நீ
நொடிகள் உன் நினைவால் நகர்வதால்
பெண்ணே என் வாழ்க்கை நீ

சுந்தரராஜன்