நிழலாய் இருந்த உன்னை நிஜமாய் பார்த்த முதல் நாள் அலாரம் வைத்து விட்டு உடலளவில் உறங்கி விட்டேன் மூன்று முறை விழித்து பார்த்து கடைசியில் அலாரத்தை நான் எழுப்பினேன் எனக்கு உன்னை பிடிக்கும் என உனக்கு தெரியாது உனக்கு என்ன பிடிக்கும் என எனக்கு தெரியாது மனதில் பட்டிமன்றம் நடத்தி உடை தேர்வு செய்தேன்
நிழற்ப் படம் பார்த்தே உன் நிஜத்தை கற்பனை செய்தவன் நிஜமாய் உன்னை பார்க்கும் போது உன் நிழலை கூட முழுதாய் பார்க்கவில்லை
எந்த தேர்விற்கும் நான் இவ்வளவு தயார் செய்ததில்லை உன்னுடன் பேசும் முன்பு என்ன பேச வேண்டும் என பட்டியல் இடுகின்றேன் பாவி மனது நீ ஹலோ சொன்னவுடன் எல்லாவற்றையும் மறந்து விடுகிறது எங்கேயடி கற்றுக்கொண்டாய் ஒற்றை வார்த்தையில் ஒருவனை சாய்ப்பதை